ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் வடமாநில தொழிலாளர்கள் மீது பல்வேறு வழக்குகளை போடுவேன் என சீமான் பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே எடுத்துக் கொண்டவர். அந்த வகையில், இவர் செய்து வரும் அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே உண்மை. தேள் கதை, கொசு கதை, பூரான் கதை என இவர் அளந்து விடும் கதைகளுக்கு ஒரே அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இவரின், கதைகளை அப்பாவி தம்பிகள் மற்றும் தங்கைகள் நம்பி வருகின்றனர். மேலும், தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையிலும் தொடர்ந்து சீமான் பேசி வருகிறார். இவரின், வன்மம் நிறைந்த பேச்சை பலர் கண்டித்து வருகின்றனர்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் அகால மரணமடைந்தார். இதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிப்- 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. இதனை, முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா களம் இறக்கப்பட்டுள்ளார். இவரை, ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது வடமாநில தொழிலாளர்கள் மீது தனது முழு வன்மத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.