தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகளுடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் பிரிவினைவாதிகளுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. அதன்படி, தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை ஆதரிக்கும் வகையில், இவர் பேசிய ஏராளமான காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
இதனிடையே, ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத் தலைவராக இருந்தவன் முகம்மது யாசின் மாலிக். இவன், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் குற்றவாளி என்று என்.ஐ.ஏ. நீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பினை வழங்கியிருந்தது. அதன்படி, தம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் யாசின் ஒப்புக்கொண்டான். அந்த வகையில், பிரிவு 16 (பயங்கரவாதச் சட்டம்), 17 (பயங்கரவாதச் செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்தல்), 20 (பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பில் உறுப்பினராக இருப்பது) உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவன் மீது சுமத்தப்பட்டன.
இவன், கடந்த 1990-ல் 4 விமான படை வீரர்களை கொன்றவன். பல அப்பாவி ஹிந்து பண்டிட்களை கொன்றவன். பண்டிட் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்க மிக முக்கிய காரணமானவன். மேலும், லட்சக்கணக்கான பண்டிட்களை அகதிகளாக மாற்றியவன் என பல குற்றச்சாட்டுகள் இவன் மீது உண்டு. இப்படிப்பட்ட பிரிவினைவாதியை தமிழகம் அழைத்து வந்தவர் சீமான்.
அதேபோல, பாகிஸ்தான் ஆதரவுடன் ஜம்மூ காஷ்மீரில் ரத்த ஆறு ஓட மிக முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தவர் சையத் அலிஷா கிலானி. பல அப்பாவி காஷ்மீர் இளைஞர்களின் மனதிலும், எண்ணத்திலும் மதவெறியை திணித்து அவர்களை தவறான வழியில் திருப்பியவர் இந்த கிலானி. இவர், உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இவரது, மறைவையொட்டி பாகிஸ்தான் அரசு துக்கம் அனுசரித்தது. அந்த வகையில், பயங்கரவாதி கிலானியின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கையை வெளியிட்டு இருந்தது.
இப்படியாக, தேசத்திற்கு எதிராக பிரிவினையை தூண்டி விடும் நபர்களுடன் சீமான் நெருக்கம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தான், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி சோதனையை நடத்தி இருப்பதாக பிரபல ஊடகமான பாலிமர் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.