நடிகர் கமலஹாசன் தந்தையும், தாமும் ஒன்றாக சைக்கிளில் சென்று சலங்கை ஒலி திரைப்படத்தை பார்த்தாக சீமான் கூயிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், அளந்து விடும் கதைகளுக்கு ஒரு முடிவே இல்லை என்பதே நிதர்சனம். அந்த அளவில் பல்வேறு கதைகளை கூற கூடியவர். இவர், கூறுவது உண்மையா? பொய்யா? என்று கூட ஆராயாமல் தம்பிகளும், தங்கைகளும் கேட்டு வருகின்றனர் என்பதே கால கொடுமை. இதனிடையே, உயிரோடு இல்லாத பிரபலங்களின் புகழை திருடியோ அல்லது அவர்கள் தம்மை பாராட்டியதாக கூறி சீமான் அளந்து விடும் கட்டு கதைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது.
அந்த வகையில், பிரபல பாடகர் எஸ்.பி.பி. தாம் இலங்கை சென்று பாடி விட்டு வர தம்மிடம் அனுமதி கேட்டார் என தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்திரா காந்தி சுட்டுகொல்லப்பட்டதை அறிந்து தாம் மூன்று நாட்கள் சாப்பிடவில்லை என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, ஏ.ஆர். ரகுமான் தாயாரின் மறைவையொட்டி இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு இருந்தார் ;
அம்மா கரீமா பேகம் அவர்களைச் சந்தித்ததில்லை என்றாலும், அவர் என் மீது பேரன்பு கொண்டிருந்தார் என்பதை சகோதரி ரைஹானா கூறக் கேள்வியுற்று நெகிழ்ந்திருக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன். அம்மாவுக்கு எனது கண்ணீர்வணக்கம் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பிரபல இணையதள ஊடகமான பிஹைண்ட் உட்ஸ்க்கு சீமான் அளித்த பேட்டியில், தாமும் நடிகர் கமல்ஹாசனின் தந்தையும் ஒன்றாக சைக்கிளில் சென்று சலங்கை ஒலி திரைப்படத்தை பார்த்ததாக கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.