எரிகாற்று உருளை வழக்கு: சீமான் கடும் எதிர்ப்பு!

எரிகாற்று உருளை வழக்கு: சீமான் கடும் எதிர்ப்பு!

Share it if you like it

கோவை வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ள கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறி இருந்தது. இச்சம்பவம், தமிழகத்தையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட செயலாக இது இருக்க கூடும் என ஆங்கில ஊடகங்கள் முதற்கொண்டு, பல்வேறு பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இதனிடையே, கோவை மாவட்ட ஐக்கிய ஐமாத் பொதுச் செயலாளர் அப்துல் ஜாஃபார் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ;

கடந்த 23 – ஆம் தேதி கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த ஒரு அசாதாரண செயல் நடைபெற்றது. அதனை சிலிண்டர் வெடிப்பு என்று கூறினார்கள். அது தொடர்பாக, மாநகர காவல் ஆணையாளரை சந்திக்க வந்தோம். எங்களை பொறுத்த வரை இது தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்கான முயற்சி தான். கடவுள் கோவை மாவட்ட மக்களை காப்பாற்றி இருக்கிறார். தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடவுள் தண்டனையை வழங்கியுள்ளார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் இன்றும் கோவையில் தான் இருக்கிறார்கள். அவர்களை, எல்லாம் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும். காவல்துறை எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஐக்கிய ஐமாத் முழுமையான ஒத்துழைப்பை நல்கும். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, உளவுத்துறையின் தோல்வியை இது காட்டுகிறது. உளவுத்துறை சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டினை சுமத்தி இருந்தார்.

தேசத்தை நேசிக்கும், இஸ்லாமிய அமைப்புகளே இது தீவிரவாத செயலாக இருக்க கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இடும்பவனம் கார்த்தி உள்ளிட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு முட்டு கொடுக்கும் விதமாக பேசி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், கோவை மாவட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம் குறித்து என்.ஐ.ஏ. விசராணை மேற்கொள்ளும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவை எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு என்று நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.


Share it if you like it