கோவை குண்டு வெடிப்பு குறித்து இதுவரை வாய் திறக்காமல் சீமான், திருமா, அருணன், ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்கள் எங்கே? பதுங்கி இருக்கின்றனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ.) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அல்கொய்தா, அல் உம்மா, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேசத்திற்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடுவதாகவும், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவது, இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து அழைத்து வந்து பயங்கரவாத பயிற்சி அளித்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. எனவே, மேற்கண்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்து இருந்தன.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் பி.எ.ஃப்.ஐ. அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து இருந்தன. இதற்கு, தங்களது எதிர்ப்பினை காட்டும் விதமாக, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியிருந்தனர்.
காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, பி.எ.ஃப்.ஐ. அமைப்பை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பொது அமைதிக்கு, குந்தகம் ஏற்படுத்திய பயங்கரவாதிகளை விமர்சனம் செய்யாமல், பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்பினர் மீது திருமா, சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் வீண் பழியை சுமத்தி இருந்தனர். இதுதவிர, பெட்ரோல் குண்டு வீச்சுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது போல அவர்களது கருத்து அமைந்து இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், கோவை நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம், நடந்து மூன்று நாட்களை கடந்து விட்டது. இதுவரை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எந்த ஒரு தலைவரும் இதுகுறித்து பேசவில்லை. அதற்கு மாறாக, குற்றமே செய்யாத பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகள் மீது அன்று வீண் பழியை சுமத்திய மேற்கண்ட போலி தலைவர்கள் இப்போது எங்கே? பதுங்கி இருக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் ஓட்டு வேண்டும் என்பதற்காக, கோவை குண்டு வெடிப்பை கூட கண்டிக்க மனமில்லாத இவர்கள் அந்த பயங்கரவாதிகளை விட மிகவும் மோசமானவர்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.