செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகளின் செல்பி !

செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகளின் செல்பி !

Share it if you like it

செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களைப் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதை விட தங்கள் கைபேசியில் உள்ள செல்பி கேமராவில் தான் அதிகமாக பார்கிறார்கள்.

இந்த செல்பி மொத்தம் 13 வகைகளில் உள்ளது. அதில் தனி நபர் செல்பி, குழு செல்பி, வாத்து முகம் செல்பி, போவ்ன்ட் மை லைட் செல்பி, பிஷ் கேப் செல்பி, என முகத்திற்கும், புருவத்திற்கும், கண்களுக்கும், தனித்தனியே பல செல்பிகள் உள்ளன.

இந்நிலையில் மனிதர்களை மிஞ்சும் அளவிற்கு விலங்குகள் செல்பி எடுப்பதுபோல் நெட்டிசன் ஒருவர் AI மூலம் காண்பித்துள்ளார். நடிகர் நடிகைகளின் உருவம் மாற்றும் ட்ரெண்ட் சென்று இப்போது விலங்குகளை வைத்து புதியதாக உருவாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

அந்த வகையில் சிறுத்தை, கரடி, மான், பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகள் தனது கூட்டத்துடன் செல்பி எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த புகைப்படங்கள் மூலம் நாம் பார்க்கலாம்.


Share it if you like it