யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் தமிழகத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை பரிந்துரை !

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் தமிழகத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை பரிந்துரை !

Share it if you like it

2024-25-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட மராத்தா ராணுவ நிலப்பரப்பு காட்சிகள் பரிந்துரைக்கப்படுவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மராட்டிய ஆட்சியில் ராணுவ சக்தியின் உத்தியாக பன்னிரண்டு பகுதிகள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சல்ஹேர் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட், கந்தேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க், சிந்துதுர்க் போன்றவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோட்டைகள் மராட்டிய ஆட்சியின் ராணுவ சக்தியாக இருந்து, தற்போதும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த 12 புவியியல் மற்றும் நிலப் பகுதிகள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெற இந்திய அரசு சார்பில் யுனெஸ்கோவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it