2026 சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை தி.மு.க. தோற்றால் அது பா.ஜ.க.வின் ஆட்சியாகவே அல்லது பா.ஜ.க.வின் ஆட்சியாக தான் இருக்கும் என தி.மு.க. ஆதரவாளர் மணி கதறி இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர் மூத்த பத்திரிகையாளர் மணி. இவர், தனது விருப்பத்தை பல்வேறு யூ டியூப் ஊடகங்களின் வாயிலாக தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர் அதேவேளையில், விடியல் ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்களை மென்மையாக கண்டிக்க கூடியவர். இவரது, காணொளிகளை பார்த்தவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இதனிடையே, லிபர்ட்டி இணையதள ஊடகத்திற்கு அண்மையில் பேட்டியளிக்கும் போது இவ்வாறு கூறினார் ;
முதல்வர் ஸ்டாலின் அருள்கூர்ந்து முதலில் பரிசிலிக்க வேண்டும் என உங்கள் மூலமாக வைக்கும் கோரிக்கை. வழக்கமாக, இந்த மாதிரியான பேட்டிகளில் தகவலை சொல்லிவிட்டு நிறுத்தி விடுவோம். இது, பிரசங்கம் மாதிரி ஆகி விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தயவு செய்து நினைக்க வேண்டாம். நிலைமை மோசமாக இருக்கிறது. ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது.
கோவை கள நிலவரம் மிக நன்றாக தெரியும். இன்று நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அங்கு வளர்ந்து இருக்கிறது. ஆ. ராசாவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பந்த் அறிவிக்கப்பட்ட போது 90% கடைகள் அடைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது, எல்லாம் ஒதுக்கி தள்ள முடியாத செய்திகள். இதையெல்லாம், பார்க்கும் போது அவர்கள் சமூகத்தில் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் முதல்வரே இதில் தனி கவனம் செலுத்துங்கள் என்று அலறி இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், ஆதன் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
ஒருபுறம் தி.மு.க. தனது செல்வாக்கை தொடர்ந்து இழந்து வருகிறது. மறுபுறம் பா.ஜ.க.வின் வளர்ச்சி வேகமாக இருந்து வருகிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த தேர்தல் எப்போது நடந்தாலும். 2024- ல் தேர்தல் வர வாய்ப்பு இல்லை. 2026 – ஆம் ஆண்டு தேர்தல் வரும் போது (சட்டமன்ற தேர்தல்) தி.மு.க. தோற்கடிக்கப்பட்டால், அதற்கு நிறை வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை, தி.மு.க. தோல்வியை தழுவினால். அடுத்து வரக்கூடிய ஆட்சி பா.ஜ.க.வின் ஆட்சியாக தான் இருக்கும் மீண்டும் அலறி இருக்கிறார்.