பாலுக்காக உயிரை விட துணிந்த முதியவர் பரபரப்பு சம்பவம் !

பாலுக்காக உயிரை விட துணிந்த முதியவர் பரபரப்பு சம்பவம் !

Share it if you like it

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில், சென்னை, திருவளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் படகுகளில் பயணிக்கின்றனர். மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் தண்ணீர், பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் இடுப்பளவு மற்றும் முட்டியளவு மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. பலரும் உணவு, தண்ணீர் இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கிட குட்டி யானை என்று சொல்லக்கூடிய வாகனம் ஒன்றில் வந்து சிலர் பால் பாக்கெட்டுகளை மக்களுக்கு கொடுத்துள்ளனர். கொடுத்துவிட்டு வாகனம் சென்று கொண்டிருக்கும்போது முதியவர் ஒருவர் ஒரு பாக்கெட் பாலுக்காக வாகனத்தில் தொங்கி கொண்டு போன சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/ThanthiTV/status/1733003528799736174?s=20


Share it if you like it