தனது கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், மீது அமலாக்கத்துறை அண்மையில் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த வகையில், சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜாமீனில் கொண்டு வந்து விட வேண்டும் என தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான், அமைச்சரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றினை தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனுவில், தனது கணவருக்கு எதிராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருகிறார். செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது. அவரை உடனே விடுவிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் கரூர் பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜி குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.