இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அப்பாவி பொதுமக்களுக்கு கரம் கொடுக்க முன்வந்த சேவா இன்டர்நேஷனல்.
இலங்கை தற்பொழுது மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. கடுமையான விலையேற்றம், மருந்து பொருட்கள் தட்டுபாடு, உணவு பொருட்கள் தட்டுபாடு என சோதனைக்கு மேல் சோதனை என அப்பாவி பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். இலங்கை மக்கள் படும் இன்னல்களை கண்டு பல நாடுகள் தங்களால் இயன்ற உதவிகளை அவ்வபொழுது செய்து வருகின்றன. ஆனால், இந்திய அரசு மட்டுமே இலங்கை மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
அதேபோல, கொரோனா தொற்று எனும் கொடிய நோய் இலங்கையை புரட்டி போட்ட சமயத்தில் மருந்துகள், மாத்திரைகள், தடுப்பூசிகள் என பல மருத்துவ உதவிகளை அந்நாடு கேட்காமலேயே செய்ய முன்வந்த ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்குப் பிறகு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தீவு தேசத்திற்கு இந்திய அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்துள்ளது.
“அண்டை நாடாகவும், நமது நாட்டின் பெரிய சகோதரராகவும், இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி வருகின்றன. இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் எங்களைப் பொறுத்தவரை, உயிர்வாழ்வது எளிதானது அல்ல. நாங்கள் வெளியே வருவோம் என்று நம்புகிறோம் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சனத் ஜெயசூர்யா உருக்கமுடன் நினைவு கூர்ந்து இருந்தார்.
இந்த நிலையில்தான், ‘சேவா இன்டர்நேஷனல்’ இலங்கை மக்களுக்கு உதவ தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளது. மலையக தமிழர்கள், ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். சேவை அமைப்பான சேவா இண்டர்நேஷனல் மற்றும் உலக நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் ‘அகண்ட தமிழ் உலகம்’ ஆகிய அமைப்புகள் நேரடியாகவே களத்தில் உதவி வருகின்றன
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கடல்வழியாக இந்தியாவிற்கு அகதிகளாக செல்கின்ற சம்பவங்கள் மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியில் இடம் பெற்ற சூழலில் அதனை அறிந்த அகண்ட தமிழ் உலகம் மற்றும் சேவா இண்டர்நேஷனல் அமைப்பின் பொறுப்பாளர்கள் நேரடியாக தலைமன்னார் படப்படி பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை 2.5.2022 அன்று நேரில் சந்தித்து உணவு பொருட்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளிலுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும் நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.