பெண்களுக்கெதிரான வன்கொடுமையை கண்டித்து  ராஷ்ட்ர சேவிகா சமிதி ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கெதிரான வன்கொடுமையை கண்டித்து ராஷ்ட்ர சேவிகா சமிதி ஆர்ப்பாட்டம்

Share it if you like it

சென்னையில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவித்து வள்ளுவர்கோட்டத்தில் ராஷ்ட்ர சேவிகா சமிதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. காலைமுதல் பெரும்திரளான பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.  ஹைதராபாத்தில் பெண் கால்நடைமருத்துவர் ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டார். இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது, ‘நம் நாட்டின் வரலாற்றை பார்த்தல் பெண்களின் நிலை சிறப்பானதாக இருந்து வந்துள்ளது. நம் கலாச்சாரம் பெண்களுக்கு உயர்மதிப்பை அளிக்கிறது. சமூகவலைத்தளங்களும், சினிமாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கின்றன. பள்ளிகள், கல்வி நிலையங்கள், வேலை செய்யும் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பெண்களுக்கு எதிராக குற்றம்புரிபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும், அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படவேண்டும். மேலும் பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத் தரப்படவேண்டும்’ என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மாநில பொறுப்பாளர் திரு. ரவிக்குமார் கலந்துகொண்டார். அவர் ‘பாரதியார் மற்றும் ஒளவையார் போன்ற பெண்களை  போற்றியவர்கள் வாழ்ந்த மண் நம்முடையது. இது பெண்களை தாயாக மதிக்கும் நாடு’ என்று பேசினார் .

ஆர்ப்பாட்டத்தில் பல அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Share it if you like it