சென்னை பெரம்பூரில் உள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் செல்கிறது. கடந்த சில நாட்களாக தினமும் இதுபோல் கழிவுநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி அங்கு செல்லும் மக்கள் தங்கள் மூக்கை துணியால் மூடிக்கொண்டு செல்கின்றனர். மாநகராட்சி ஊழியர்களும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அந்த பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் தினமும் அந்த பகுதியில் மாணவ மாணவிகள் பெண்கள் வேலைக்கு செல்வோர் என அந்த சாலை வழியாக நடந்து செல்வதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருப்பதால் மக்களை நோய்கள் தாக்கும் அபாயமும் அதிக அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அருகில் தான் பெரம்பூர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் லேசான மழை பெய்தாலே சாலையில் மழைநீர் தேங்கி நின்று விடுகிறது. சேரும் சகதியுமாய் இருப்பதால் மாணவர்கள் நடக்கும்பொழுது பள்ளி சீருடை முழுவதும் அலங்கோலமாய் மாறிவிடுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டை வைக்கின்றனர்.