தமிழகத்தில் திராவிட ஆட்சி அமைந்ததிலிருந்து மக்களின் நிலை பரிதாபகரமான நிலையில் தான் உள்ளது. திமுக அரசு மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் தமிழக அரசு பேரூந்துகளோ காலாவதியான நிலையில் உள்ளது. பள்ளிக்கூடத்தில் காலை உணவை திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் பள்ளியில் வழங்கும் உணவு தரமற்று இருப்பதாகவும் மாணவர்கள் அதனை குப்பையில் கொட்டியதையும் செய்தித்தாள்களிலும் செய்தி ஊடங்கங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். இதுமட்டும் அல்லாமல் அரசு பள்ளிகளின் மேற்கூரைகள் இடிந்து விழுவது வழக்கமாகிவிட்டது. அதிலும் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடத்தின் மேற்கூரை கட்டி முடித்த 3 மாதத்திலேயே விழுந்த அவலமும் நடந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து குடித்த 12 மாணவ மாணவிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் பகுதியில் மாணவர்களுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதால் அப்பகுதியினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து புதியதலைமுறையில் செய்தி வெளியான நிலையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
வயலோகம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு பகுதியில் கடந்த 5 நாட்களில்12 மாணவ மாணவிகளுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் கழிவு நீர் கலந்தது தெரியவந்தது. இந்த குடிநீரை குழந்தைகள் குடித்ததால்தான் அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டினர். கடந்த ஜூன் மாதம் அதே கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் நித்தீஸ்வரன் மஞ்சள் காமாலையால் உயிரிழந்த நிலையில், அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனக் கூறுகின்றனர்.
இதுகுறித்து அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் பிரபு, ஒன்றிய ஆணையர் அபிராமி சுந்தரி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் அந்தப் பகுதியில் நிலவும் சுகாதாரமற்ற சூழலையும் பார்வையிட்டனர்.
அப்போது பொதுமக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொது மக்களை சமாதானம் செய்த அதிகாரிகள் உடனடியாக தூய்மையான குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்து சென்றனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வாக்கிங் போவதையும் பேட்டி கொடுப்பதையும் தான் வாடிக்கையாக வைத்துள்ளாரே தவிர மக்களை நீரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பாரா ? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.