நெல்லையை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் 2 பாதிரியார்கள் உட்பட மொத்தம் மூன்று நபர்களை காவல்துறையினர் தேடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏசுபிரான் கூறிய நற்கருத்துக்களை மக்களிடம், கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிலைமை இன்று முற்றிலும் மாறிவிட்டது. தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான கிறிஸ்தவ பாதிரியார்கள் தி.மு.க.வின் ஆசி பெற்றவர்கள். அமைதியை தேடி சபைகளுக்கு வரும் மக்களிடம், பா.ஜ.க. குறித்து அவதூறு பரப்புவதே பல பாதிரியார்களின் தற்போதைய வேலையாக மாறியுள்ளது. இதனால், சில பாதிரியார்கள் தங்கள் மனம் போன போக்கில் பல்வேறு தவறுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதனிடையே, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கலந்தபனை, சீயோன்புரத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் டேவிட் ராஜ். இவரது, மகன் அனீஸ் பவுல், 25, என்பவரும் பாதிரியார் ஆவார். அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண், ஜெபம் செய்ய அடிக்கடி இச்சபைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், அனீஸ் பவுலுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அந்த வகையில், அப்பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக அனீஸ் பவுல் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். இதனை, உண்மையென நம்பிய அப்பெண் அவரிடம் அதிக நெருக்கத்தை காட்டி இருக்கிறார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அப்பெண் அனீஸை வலியுறுத்தி இருக்கிறார். இதற்கு, அவர் மறுப்பு தெரிவித்தாக சொல்லப்படுகிறது. இதனால், ஏமாற்றம் அடைந்த அப்பெண் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாதிரியார்கள் டேவிட்ராஜ், அனீஸ் பவுல் மற்றும் அவரது நெருங்கிய உறவினர் உட்பட மூன்று பேரும் தற்போது தலைமறைவாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.