ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்த 26 வயது உடைய கிறிஸ்தவ பாதிரியார் அஹரோன் பிரகாஷ். 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அவனை கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், பதவி ஏற்ற பின்பு, அம்மாநிலத்தை கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் முழு கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு, அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்றம் செய்து வருகின்றனர் என சமூக ஆர்லவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில்,
ஆந்திர மாநிலம் எட்லபாடு என்ற இடத்தில் சீதாதேவியின் கால் தடம் இருப்பதாக, புனிதமான அந்த மலையை ஹிந்துக்கள் இதுநாள் வரை வழிபட்டு வந்தனர். ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, அந்த முழு மலையையும் கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, பா.ஜ.க மூத்த தலைவர் சுனில் தியோதர் ஆந்திர மாநிலத்தின் நிலைமையே முற்றிலும் மாறிவிட்டது. பின்புறம் நரசிம்ம சிற்பம் உள்ளது. குண்டூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மாஃபியாக்கள் பேரழிவை உருவாக்கியுள்ளனர், என வேதனையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இதே நிலை தொடர்ந்தால், வெகு விரைவில் ஹிந்துக்கள் ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனுக்கு நற்போதனைகளை போதிக்க வேண்டி, சிறுவனின் தாய் மதபோதகரிடம் அனுப்பியுள்ளார். ஆனால், தீய ஆவி புகுந்த பாதிரியார் அச்சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுவனுக்கு உடல் நிலை தொடர்ந்து மோசமடையவே பெற்றோர்கள் தங்களது மகனை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அப்பொழுது தான், சிறுவனுக்கு ஏற்பட்ட கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, பெற்றோர்கள் காவல்துறையில் அளித்த புகார் அடிப்படையில், 26 வயதான கிறிஸ்தவ பாதிரியார் அஹரோன் பிரகாஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புகாரை திரும்ப பெற வேண்டும் என கிறிஸ்தவ அமைப்புகள் தங்களுக்கு மிரட்டல் விடுவதாக சிறுவனின் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.