வளர்ப்பு தந்தை மற்றும் அவரது 3 சகோதர்கள் மீது 17-வயது சிறுமி பாலியல் புகார் கொடுத்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த ஷெரிப் மற்றும் அவரது மனைவி ஜமீலாவிற்கு இம்தியாஸ், இர்பான் மற்றும் ஹனீப் என மூன்று மகன்கள் உள்ளனர். அந்த தம்பதியினர் பெண் குழந்தை ஒன்று வேண்டும் என விரும்பியுள்ளனர். இதன்காரணமாக, 2005- ஆம் ஆண்டு ஒரு வயது உடைய (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெண் குழந்தை பாத்திமாவை சட்டவிரோதமாக தத்தெடுத்துள்ளனர்.
இதையடுத்து, உரிய வயதில் பருவம் அடைந்துள்ளார் ஷெரிப் மகள். அதன் பின்னரே, பாத்திமாவிற்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை தந்தையாக இருந்த ஷெரிப் மெல்ல மெல்ல காம கொடூரனாக மாறியுள்ளான். இதுதவிர, அவளின் மூன்று சகோதரர்களும் 17 வயது உடைய பாத்திமாவிற்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இக்கொடுமையை தாங்க முடியாமல் தனது தாய் ஜமீலாவிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடை வேண்டிய தாய், அவர்களுக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதை வெளியே சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல், தனக்கு ஏற்பட்ட அநீதியை தனது உடன் பிறந்த சகோதரியிடம் சொல்லி கதறியுள்ளார். அந்த வகையில், அவர் கொடுத்த அறிவுரையின் படி தனது வளர்ப்பு தந்தை மற்றும் மூன்று சகோதர்கள் மீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்தே, இந்த கொடூர சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல்துறையில் பாத்திமா அளித்த வாக்குமூலம் இதோ..
“நான் பிறந்து சில மாதங்களிலேயே எனது பெற்றோரை இழந்தேன். எனக்கு ஒரு சகோதரி மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவர்களால் என்னை வளர்க்க முடியாமல் ஷெரீப் குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டார்கள். எனக்கு விவரம் தெரிந்த பின்னும் கூட என் பெற்றோர்களாகவே அவர்களை பார்த்தேன். என்னன சொந்த மகளை போல வளர்த்தார்கள். இதுதவிர, என்னை ஒரு முன்னணி கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைத்தார்கள். அதன் பின்னர், எனது தந்தை 2020-ல் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார், அதை வெளியே சொல்ல வேண்டாம் என்று மிரட்டினர்.
இதையடுத்து, மூன்று சகோதரர்களும் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் திருமணமான ஆண்கள். இதை என் வளர்ப்புத் தாயிடம் கண்ணீருடன் சொன்னேன். அவர்களின் விருப்பப்படி அனுசரித்துச் செல்வது தான் உனக்கு பாதுகாப்பாக இருக்கும் தெரிவித்து விட்டால். பாலியல் சீண்டல் காரணமாக நான் கருவுற்றேன். இதனை அறிந்த பெற்றோர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ய வைத்தார்கள். அதற்கு, பிறகு என்னைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், நான்கு பேரும் மீண்டும் அதே பாலியல் சீண்டல்களை தொடர்ந்தனர். எனக்கு நேர்ந்த கொடுமையை எனது சகோதரியிடம் தெரிவித்தேன் அவர் வழங்கிய ஆலோசனைபடியே காவல்துறையை அணுகினேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்செய்தியினை பிரபல வார இதழ் Organiser வெளியிடுள்ளது. இது போன்ற சம்பவங்கள் எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது.
Organiser link here