தற்போது பங்குச்சந்தையில் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. சுமார் 220 சதவிகிதம் லாபம் ஈட்டித் தந்திருப்பதால் முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் தற்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். முதலீடுகள் அதிக அளவில் இருப்பதால் மியூச்சுவல் ஃபண்டுகளும் நல்ல லாபத்தை தந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தையில் மிட் கேப் ஃபண்டுகள் சுமார் 149% லாபம் தந்துள்ளன. இதில், முக்கியமாக 5 மிட் கேப் ஃபண்டுகள் 160% முதல் 220% வரை லாபம் ஈட்டியுள்ளன. குவான்ட் மிட் கேப் 220% சதவீதமும், பி.ஜி.ஐ.எம். மிட் கேப் ஃபண்ட் 217% சதவீதமும், எஸ்.பி.ஐ. மிட்கேப் ஃபண்ட் 175 சதவீதமும், மிரே ஆசெட் மிட் கேப் ஃபண்ட் 174% சதவீதமும், இடில் விசிஸ் மிட் கேப் ஃபண்ட் 163% சதவிகிதமும் லாபம் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, முதலீட்டாளர்கள் இதுபோன்ற நல்ல ஃப்ண்டுகளை தேர்ந்தெடுத்து குறைந்தது 3 ஆண்டுகள் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல லாபத்தை பெறலாம்.