காஞ்சிபுர மாவட்டத்தில் பழமையான சிவன் கோவில் ஒன்று டயர் கடையாக மாற்றப்பட்ட காணொளி ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே அதிகமான கோவில்களை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது. அதேவேளையில், பல்வேறு புனிதமான ஆலயங்கள் சிதிலமடைந்தும், மிகவும் மோசமான நிலையில் போதிய பராமரிப்பு இன்றி காட்சி அளிக்கும் கோவில்களும் இங்கு உண்டு என்பதே கசப்பான உண்மை. அந்த வகையில், ஈஷா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் 100-க்கும் மேற்பட்ட பாழடைந்த கோவில்களின் புகைப்படlதையும், காணொளியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் பதிவு செய்து இருந்தார். இதுதவிர, கோவில் அடிமையை நிறுத்து என்ற ஹேஷ் டேக்கினையும் பதிவு செய்து இருந்தார்.
“நான் ஆன்மீக யாத்திரைகளுக்கு சென்று வருகிறேன். நம் புனித ஸ்தலங்களில் நடக்கும் இதயமற்ற சுரண்டல்களை பார்த்து என் இதயம் ரத்தம் சிந்துகிறது. மற்ற வழிபாட்டு தலங்களை போல் நம் கோவில்களும் விடுதலை பெற வேண்டும். சத்குரு இதற்கு குரல் கொடுத்துள்ளார். நம் நம்பிக்கைகளை மீட்க நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும் என்று பிரபல நடிகை கஸ்தூரியும் ஹிந்து ஆலயங்களுக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து வேதனை தெரிவித்து இருந்தார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறும், மிகுந்த முக்கியத்துவமும் கொண்ட நம் கோவில்களின் தற்போதைய நிலையை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது சரி செய்யப்படுவதோடு, முறையான நிர்வாக அமைப்பை உருவாக்கி அனைத்து இடங்களிலும் உள்ள கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க, இதுவே சரியான தருணம் என்று ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் கூட தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படியாக, ஹிந்து கோவில்களுக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் தான், காஞ்சிபுர மாவட்டம் மூங்கில் மண்டபம் அருகில் வள்ளல் பச்சையப்ப சாலையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஒன்று டயர் கடையாக மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த, செய்தியினை பிரபல ஊடகமான பாலிமர் வெளியிட்டுள்ளது.
அதன் லிங்க் இதோ.
.