மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 6 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் கடந்த புதன் கிழமை அன்று அமைதி பேரணியை நடத்தினர். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து பின்னர் அண்ணாசாலை முதல் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவகம் வரை நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊடகவியலாளர் செந்தில் திமுகவிற்கு முட்டு கொடுக்கும் வகையில் அவருடைய எக்ஸ் வலைதளபதிவில் “ஊடகவியாளர் செந்தில் தனது எக்ஸ் வலைத்தள பதிவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள புதிய தலைமைச்செயலக வளாகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நடந்தே… நல்லா கேளுங்க நடந்தே ( அமைதிப் பேரணி ) மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
யார்ரா அது அவருக்கு உடம்பு சரியில்லைனு புரளிய கிளப்பியவன்.. இங்க வா..
பி.கு : அண்ணாசாலைக்கும் மெரினாவுக்கும் எவ்வளவு தூரம் எனத் தெரியாதவர்கள் ஓரமாகச் செல்லவும்”
இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் ஜீப் வாகனம் ஒன்றில் ஏறி அமரும்பொழுது அவருடைய உடல் கைகள் நடுக்கமுற்று பலவீனமாக உள்ளதுபோல் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஊடகவியலாளர் செந்தில் பதிவிற்கு பதிலடி தரும் வகையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி எக்ஸ் பதிவில், யப்போ புதிய தலைமைச் செயலகத்திற்கும், மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கும் என்ன பத்து கிலோ மீட்டர் தூரமாப்பு இருக்கும்…? சும்மா கிச்சு கிச்சு மூட்டாம அந்த பக்கம் ஓரமா போய் உடன்பிறப்புகளோடு ஓடிப்பிடிச்சி கண்ணாமூச்சி விளையாடுங்கப்பு. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து திமுகவிற்கு முட்டு கொடுக்கும் ஊடகவியலாளர் செந்திலை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.