டி.ஆர் உடல் நிலை: சிம்பு அறிக்கை!

டி.ஆர் உடல் நிலை: சிம்பு அறிக்கை!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.ஆர். ராஜேந்திரன் உடல்நிலை குறித்து அவரது மகன் சிம்பு தனது ட்விட்டர் வெளியிட்ட அறிக்கை.

எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்பொழுது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it