திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் உள்ள புதிய பாலத்தின் அருகே, பழைய பாலம் இருந்த இடத்தில் மண் அரிப்பை தடுக்க ரூ.6.5 கோடி செலவில் கடந்த ஆண்டு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் தண்ணீரின் வேகத்தில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. தண்ணீர் அதிக அளவில் செல்வதால் இந்த தடுப்புச் சுவர் உடைந்துள்ளது. மேலும், கொள்ளிடம் ஆற்றுக்குள் உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் இருப்பதால் திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
திமுக அரசால் ரூ.6.5 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்ததை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வடிவேலு நகைச்சுவை புகைப்படத்தை பதிவிட்டு கொள்ளிடம் ஆற்றில் திமுக ஆட்சியில் 6.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை, காணவில்லை என்று பதிவிட்டு கலாய்த்துள்ளார்.