ரிசர்வ் வார்டுகள் புறக்கணிப்பு… இது சிவகங்கை சீமை தி.மு.க. கூத்து!

ரிசர்வ் வார்டுகள் புறக்கணிப்பு… இது சிவகங்கை சீமை தி.மு.க. கூத்து!

Share it if you like it

ரிசர்வ் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரிசர்வ் வார்டு கவுன்சிலர்கள் இருவர் குற்றம்சாட்டி இருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, யூனியன், ஊராட்சி உட்பட அனைத்து இடங்களிலும் ரிசர்வ் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, ஊராட்சி தலைவர்களாக இருக்கும் பட்டியல் சமூகத்தினர் அவமதிக்கப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. பட்டியல் சமூக தலைவர்கள் அமர்வது நாற்காலி வழங்கப்படுவதில்லை, அலுவலக சாவியை கொடுப்பதில்லை, கணக்கு வழக்கு லெட்ஜர்களை பார்வையிட அனுமதிப்பதில்லை என்று ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில்தான், பேரூராட்சியில் ரிசர்வ் வார்டுகள் புறக்கணிப்பதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இருவர் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சித் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த கார்த்திக்சோலை. இவரது தாய் திலகவதியும் இதே பேரூராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார். இவரது தந்தை ஆனந்த், தி.மு.க.வில் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். இப்படி 3 பதவிகள் ஒரே குடும்பத்தின் வசம் இருப்பதால், கோட்டையூர் பேரூராட்சியில் இவர்களது குடும்பம் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது என்கிறார்கள் இப்பேரூராட்சியின் கவுன்சிலர்கள். இந்த சூழலில்தான், ரிசர்வ் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரு கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார். இதில், ஹைலைட் என்னவென்றால், ஒரு கவுன்சிலர் தி.மு.க. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர்கள், “நாங்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடையது ரிசர்வ் வார்டுகள் என்பதால் எங்களது இருவரது வார்டுகளுக்கும் எந்த நலத்திட்டப் பணிகளும் செய்வதில்லை. எங்களை புறக்கணிக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது” என்று தி.மு.க. கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் கூறினார். அப்போது, இடைமறித்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் கவுன்சிலர், “எனது வார்டுக்கு சில பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, உங்களது வார்டுக்கு நபார்டு திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய்க்கு ரோடு போடப்பட்டு விட்டது. ஆகவே, இன்னும் 4 ஆண்டுகளுக்கு வாயவே திறக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். ஒரு 5 இடங்களில் மட்டும் லைட் போட்டு கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

ஆக, சமூக நீதி பேசும் தி.மு.க. ஆட்சியில் பட்டியல் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.


Share it if you like it