பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மகளிர் மல்யுத்தப் பிரிவில் இறுதிப் போட்டி வரை வினேஷ் போகத் முன்னேறி இருந்த நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்பு 50 கிலோவுக்கு மேல் 100 கிராம் வரை எடை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்தது.
இதனால் மனம் உடைந்து போன வினேஷ் போகத் மல்யுத்தப் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிரதமர் மோடியும் டிவிட்டர் பதிவில், “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன் ! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். உங்களின் இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் இப்போது அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை என்னால் விவரிக்க முடியவில்லை. அதே சமயம், நீங்கள் மீண்டு வருவதற்கான உருவகம் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக வேரூன்றி இருக்கிறோம்” என ஆறுதல் அளிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என சில பேர் சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றி வந்தனர்.
அதில் பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பார்தி மகன் சாய் லட்சுமி காந்த் பாரதி சமூக வலைதளத்தில் மீம் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.