‘டோப்பா’ தலையில் ‘டாப்பா’ கடத்தல்!

‘டோப்பா’ தலையில் ‘டாப்பா’ கடத்தல்!

Share it if you like it

உ.பி மாநிலத்தை சேர்ந்த இளைஞர் தலையில் விக் வைத்து தங்கம் கடத்தியுள்ளார். இதுகுறித்த, செய்தியினை பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் அரபு நாடான சார்ஜா.,வில் இருந்து லக்னோ விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது, பணியில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, இவரின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்துள்ளார். அந்தவகையில், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரின் தலைமுடியை தொட்டு பார்த்துள்ளனர். அதன்பின் தான், உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாம்பு சட்டையை உரிப்பது போல தனது விக் தலை முடியை அந்த இளைஞர் உரித்துள்ளார். அதில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது. தற்பொழுது, இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. அயல்நாடுகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பணம், தங்கம், வைரம் மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it