ஹிந்துமதம் குறித்து நடிகர்கள் தெரிவித்து இருக்கும் கருத்திற்கு மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ அன்றே விளக்கம் கொடுத்து இருந்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆடுகளம் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். இதையடுத்து பேசிய அவர், திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு இன்று வரை மதசார்பற்ற மாநிலமாக இருந்து வருகிறது. நடுவில் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்போது, திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்துள்ளது. வள்ளுவருக்கு காவி உடை அணிவது ஆகட்டும். ராஜ ராஜ சோழன் ஒரு ஹிந்து அரசனாக காட்ட முயற்சி நடைபெறுகிறது என்று கூறியிருந்தார்.
வெற்றிமாறன் கருத்து பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது. இதையடுத்து, பலர் தங்களது உணர்வுகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நகைச்சுவை நடிகர் கருணாஸ் உட்பட சிலர் திரைப்பட இயக்குனருக்கு தங்களது ஆதரவினை வழங்கினர். மேலும், ஹிந்து மதம் என்ற பெயர் குறித்தும் அதற்கு விளக்கம் கொடுத்து இருந்தனர்.
இதனிடையே, ஹிந்து மதம் குறித்தும், ஹிந்து என்ற பெயர் எப்படி? வந்தது என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட நடிகர், வழக்கறிஞர் என பன்முகதன்மை கொண்ட மறைந்த திரு. சோ. ராமசாமி அவர்கள் மிக அழகாக அதற்கு விளக்கம் கொடுத்து பேசி இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.