காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய சமயத்தில் அவர் கடும் பதற்றத்தில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்து இருக்கிறார். மத்திய அரசு ராகுல் காந்தியை பழிவாங்குவதாக கூறி டெல்லியை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம், ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதவிர, அறவழியில் போராடாமல் வன்முறை பாதையில் காங்கிரஸ் கட்சி பயணித்து கொண்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டினை சுமத்தி வருகின்றனர். அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு முன்பு கடந்த ஜூன் 13 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேக் உசேன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து இருந்தார். இதுதவிர, அவர், நாயை போல இறப்பார் என்று ஆணவத்துடன் பேசி இருந்தார்.
இப்படிபட்ட சூழலில், காங்கிரஸ் எம்.பி. ராகுலிடம் ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்திய பொழுது மருத்துவமனையில் இருந்த சோனியா காந்தி கடும் பதற்றத்துடன் இருந்ததாக தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன. இது பற்றிய செய்தியினை பிரபல பத்திரிக்கையான தினமலர் வெளியிட்டுள்ளது.
.