அம்மாடியோவ்…! கடலில் மூழ்கிய கப்பலில் ரூ.1.31 லட்சம் கோடி தங்கமா?

அம்மாடியோவ்…! கடலில் மூழ்கிய கப்பலில் ரூ.1.31 லட்சம் கோடி தங்கமா?

Share it if you like it

கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் 1.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேற்கண்ட தங்கப் புதையல் யாருக்கு சொந்தம் என்பதில் 3 நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 1708-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டுக்கும், பிரிட்டனுக்கும் போர் நடந்தது. அப்போது, ஸ்பெயின் நாட்டு கடற்படைக்குச் சொந்தமான சான் ஜோஸ் கப்பல், கொலம்பியா நாட்டுக்கு அருகேயுள்ள கடல் பகுதியில் பிரிட்டன் கப்பலுடன் போரிட்டுக் கொண்டிருந்தது. இந்த சண்டையின்போது நடந்த குண்டு வீச்சில் சான் ஜோஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக, அக்கப்பல் கரீபியன் கடல் பகுதியில் மூழ்கி காணாமல் போனது. இந்த கப்பலின் உடைந்த பாகங்கள் 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், அக்கப்பலில் 1. 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரிமோட் கண்ட்ரோல் கேமரா பொருத்தப்பட்டு 3,100 அடி ஆழத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை ஸ்பெயின் அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவின் மூலம் கப்பலுக்கு அருகே மற்றொரு படகு ஒன்றும், இரட்டை பாய் மர கப்பலும் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த கப்பலின் அடிபாகத்தில், தங்கம், வெள்ளி நாணயங்கள், விலை உயர்ந்த எமரால்டு கற்கள், போர்சலின் தேனீர் குடுவைகள். பீரங்கி ஆகியவை சிதறிக் கிடக்கின்றன.

இந்த சூழலில், கப்பலை கண்டுபிடித்தாகக் கூறும் அமெரிக்காவின் எம்.ஏ.சி. நிறுவனம், ஸ்பெயின், கொலம்பியா ஆகிய 3 நாடுகளும் மேற்கண்ட தங்கப் புதையலுக்காக சண்டையிட்டுக் கொள்கின்றன. ஆனால், கப்பலில் உள்ள பொக்கிஷங்கள் பிரிக்க முடியாத ஒன்றுபட்ட பூர்வீகம் என்றும், அது முழுக்க முழுக்க கொலாம்பியாவுக்கே சொந்தம் என்றும் அந்நாடு அதிபர் கூறியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு கொலம்பிய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it