பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுப்பு !

பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுப்பு !

Share it if you like it

ஜார்கண்ட் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த மாதம் 31-ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வரானார்.

அவரது தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த போது,ஓட்டெப்பில் பங்கேற்க பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்ட ஹேமந்த் சோரன் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார்.

தற்போது ஜார்கண்ட் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் பங்கேற்க அனுமதிக்கும்படி ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு செய்தார். இந்த கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.


Share it if you like it