Share it if you like it
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்தடைக்குறித்து பேசும் பொழுது. மின்தடைக்கு அணில்கள் மின்கம்பிகளில் ஓடி விளையாடுவதே காரணம் என அறிவுபூர்வமாக பேசி வாக்களித்த மக்களை, பெருமைகொள்ள வைத்தார். அதற்கு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனம் எழுந்த நிலையில் விளக்கமளிக்கின்றேன் என்ற பெயரில் மீண்டும் வம்பில் மாட்டிக்கொண்டார்.
அவர் அளித்த விளக்கமானது;- அமெரிக்காவில் அதிக மின் தடை ஏற்படுகிறது. பெரும்பாலான மின் தடை, அணில்களால் தான் உருவாகிறது. இதை அமெரிக்க பத்திரிகைகளே தெரிவித்துள்ளன. அணில்களால் மின் தடை ஏற்படுவது, பல நாடுகளில் நடக்கிறது. மின் தடை குறித்து, வாரிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் புள்ளி விபரங்களுடன் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் தான், மின் தடைக்கு அணிலும் காரணம் என்று கூறினேன்.
Share it if you like it