நான் தீவிர இந்து – ராஜமெளலி!

நான் தீவிர இந்து – ராஜமெளலி!

Share it if you like it

வெற்றிமாறன் தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல திரைப்பட இயக்குனர் இராஜமெளலியின் கருத்து அமைந்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவரது, மணிவிழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில், பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் மற்றும் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பேசிய வெற்றிமாறன் இவ்வாறு கூறினார். 

திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு இன்று வரை மதசார்பற்ற மாநிலமாக இருந்து வருகிறது. வெளியில் இருந்து வரும் பல சக்திகளின் அதிகாரத்தை இது தடுக்கும் பக்குவம் கொண்ட மாநிலமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சினிமாவை அரசியல் மையத்திற்குள் கொண்டு வருவது மிகவும் அவசியம். நடுவில் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்போது, திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்துள்ளது.

மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். இந்த கலையை சரியாக கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில், வெகு விரைவில் நம்மிடமிருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை அணிவது ஆகட்டும். ராஜ ராஜ சோழன் ஒரு ஹிந்து அரசனாக காட்ட முயற்சி நடைபெறுகிறது. இது தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் காட்ட முயற்சி நடைபெறும் என கூறியிருந்தார்.

ராஜ ராஜ சோழனை ஹிந்துவாக காட்டாமல் இஸ்லாமியராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ காட்ட வேண்டும் என்று வெற்றிமாறன் விரும்புகிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அவர், ஒரு ஹிந்து மன்னர். அவர், ஒரு தீவிர சிவ பக்தன் என்பது உலகம் அறிந்ததே. உண்மை இவ்வாறு இருக்க, இதையெல்லாம் மறைத்து விட்டு வெற்றிமாறன் போன்றவர்கள் இப்படி உளறி கொட்டுவது கடும் கண்டனத்திற்குறியது என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், பிரபல திரைப்பட இயக்குனர் ராஜமெளலி, நான் தீவிர இந்து. இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை, அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக் கொண்டு பார்த்தால் நான் இந்து இல்லை. இந்து தர்மம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர இந்து. அந்த தர்மத்தை நான் பின்பற்றுகிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ராஜமெளலியின் இந்த கருத்து போலி அரசியல்வாதிகளான திருமா, சீமான், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுக்கும் வெற்றிமாறன் போன்ற பிரிவினைவாதிகளும் கொடுத்த சம்மட்டி அடி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it