திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அசுரன் படம் பார்த்து விட்டு வெளியில் வந்து கருத்து தெரிவித்து இருந்தார்.. அதனை அடுத்து முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம், குறித்த மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது.. இன்று வரை அதற்குரிய ஆதாரத்தை திமுக தலைமை வெளியிடவில்லை என்பது நிதர்சனமான உண்மை…
ஆதித்தமிழர் மக்கள் கட்சி மூலபத்திரத்தின் நகலை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அண்மையில் சமூகவலைத்தளங்களில் வைரலாகியதை யாரும் மறந்திருக்க முடியாது..
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் எல். முருகன் அவர்கள் முரசொலி மூலப்பத்திரம் விவகாரத்தில் நான் அவதூறு பரப்புவதாக நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் மூலப்பத்திரத்தை வெளியிடுவதில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
#மூலப்பத்திரம்எங்கே pic.twitter.com/4AnW6Kg5V6
— Madan Ravichandran (@MadanRavichand4) December 30, 2020