கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படும் சவுக்கு சங்கர் தமிழக முதல்வர் துபாய் பயணம் சென்ற மர்மம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக, தனது குடும்பத்துடன் அண்மையில் துபாய் சென்று இருந்தார். தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை கொண்டு வருவதற்காக, இந்த பயணம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், பிரபல வார பத்திரிக்கையான ஜீனியர் விகடன். துபாய்க்குச் சென்ற 5,000 கோடி அமைச்சர்களை கண்காணிக்கும் ராஜ்பவன் என்று பகீர் தகவலை வெளியிட்டு இருந்தது. இச்செய்தி, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அந்தவகையில், ஆளும் கட்சியை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது, பத்திரிக்கையில் வந்த செய்தியை மேற்கோள்காட்டி 5,000 கோடி ரூபாய் மர்மம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, தி.மு.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான, ஆர்.எஸ்.பாரதி தமிழக பா.ஜ.க தலைவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சிப்பதா? அண்ணாமலை உடனே மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிடில் 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு, அண்ணாமலை கூறியதாவது;100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தி.மு.க கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்… துணிவுடன். மக்கள் துணையுடன்.. என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனிடையே, தமிழக முதல்வர் தனது குடும்பத்துடன் துபாய் பயணம் மேற்கொண்ட பொழுது, எம்.பி கனிமொழியை ஏன்? அழைத்து செல்லவில்லை ஏன்? அவர் புறக்கணிக்கப்பட்டார் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பியவர் சவுக்கு சங்கர் என்று சொல்லப்படுகிறது. இப்பொழுது, இதே நபர் தான், முதல்வர் துபாய் பயணம் மேற்கொண்டது குறித்து பகீர் தகவலை கீழ்க்கண்ட காணொளியில் தெரிவித்துள்ளார். அண்ணாமலைக்கு எதிராக நோட்டீஸ் விட்ட தி.மு.க. எம்.பி கனிமொழியின் மிக தீவிர ஆதரவாளருக்கு நோட்டீஸ் அனுப்புமா? என்று நெட்டிசன்கள் வினா எழுப்பி வருகின்றனர்.