தமிழகத்தில் தொடரும் இந்துக்கள் மீதான அரச பயங்கரவாதம்

தமிழகத்தில் தொடரும் இந்துக்கள் மீதான அரச பயங்கரவாதம்

Share it if you like it

திமுக அரசு இந்த ஆண்டு அரசு பள்ளி கல்லூரி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வளாகங்களில் சரஸ்வதி பூஜை விஜயதசமி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. இதன் மூலம் தனது இந்து விரோத அரசியலை திமுக அரசு மீண்டும் ஒரு முறை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. சமீபகாலமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி முதல் சதுர்த்தி முதல் ஊர் திருவிழாக்கள் வரை ஒவ்வொரு இந்து பண்டிகையும் கொண்டாட்டமும் நீதிமன்றத்தின் அனுமதியோடும் காவல்துறையின் அனுமதியோடும் அரசாங்கத்தின் கெடுபிடிகளையும் மீறி நடத்திக் காட்டுவது என்பது பெரும் பிரயத்தனமாக இருக்கிறது. உண்மையில் மாற்று மதம் சார்ந்த நாடுகளில் உத்தியோகம் வேலை காரணமாக வெளிநாட்டு வாசிகளாக வாழும் மக்கள் கூட அந்தந்த நாடுகளில் அவர்களின் பண்டிகை கொண்டாட்டங்களை முழு நிம்மதியோடும் சுதந்திரத்தோடும் அரசின் ஒத்துழைப்போடும் கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால் சொந்த நாட்டில் சொந்த மண்ணில் தர்மம் பிறந்த ஆன்மீகத் தமிழகத்தில் இந்து மக்கள் அவர்களின் ஆலயங்கள் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் வழிபாட்டு முறைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத துரதிருஷ்ட நிலை. இதன் முக்கிய காரணம் இந்த மண்ணின் தர்மத்தின் வழியில் நம்பிக்கையும் ஈடுபாடும் மரியாதையும் இல்லாத அரக்க கூட்டங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுத்த தமிழக மக்களின் மக்களின் சுயநலமும் அறியாமையும் மட்டுமே.

அரசு மருத்துவமனைகள் அலுவலகங்களில் கூட இந்த விஜயதசமி கொண்டாட்டங்கள் முன்னெடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சரஸ்வதி உள்ளிட்ட இந்து தெய்வங்களின் புகைப்படங்கள் உருவ வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. மஞ்சள் குங்குமம் விபூதி சந்தனம் உள்ளிட்ட இந்து அடையாளங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகிறது. இதன் மூலம் இதன் மூலம் திமுகவின் விடியல் அரசு அப்பட்டமான இந்து விரோத அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்துவதிலும் சனாதன தர்மத்தை அழிப்பதிலும் எப்படி திமுகவின் மேல் மட்ட முதல் அடிமட்டம் வரை ஒருங்கிணைந்த ஒருங்கிணைந்த செயல்படுகிறார்களோ? அதன் ஒரு வெளிப்பாடு தான் சரஸ்வதி பூஜை விஜயதசமி கொண்டாட்டங்களுக்கு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பதும். மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இடையூறுகளை ஏற்படுத்துவதும் என்பதை இனியும் தமிழக மக்கள் உணரட்டும்.

மத சாப்பற்ற மாநில அரசுக்கு ஒரு மதம் சார்ந்த ஆலயங்களிலும் அதன் நிர்வாகத்திலும் என்ன வேலை ? அதன் ஆகமத்தில் தலையிட என்ன அவசியம்? இருக்கிறது அதை கட்டுப்படுத்துவதற்கு இந்து அறநிலையத்துறை எதற்கு? என்று கேள்வி கேட்க இங்கு எந்த ஊடகங்களுக்கும் நேரமில்லை. மதசார்பற்ற மாநில அரசில் ஒரு மதத்தை சார்ந்த இந்து அறநிலையத்துறை மட்டும் எதற்கு? என்று கேட்க எந்த நீதிமன்றத்திற்கும் மன்றத்திற்கும் நேரம் இல்லை. அரசு அலுவலகங்களிலும் வளாகங்களிலும் இந்து தெய்வங்கள் பூஜைகள் வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. என்றால் ஒரு மதம் சார்ந்த ஆலயங்கள் அதன் சொத்துக்கள் வளாகங்களில் தமிழக அரசு சொந்தமான அலுவலகங்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் ஏன் இருக்க வேண்டும்? அவர்கள் எப்போது அப்புறப்படுத்தப்படுவார்கள் ? என்று இந்நேரம் நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து கேள்வி கேட்டிருக்க வேண்டும். வழக்குப்பதிந்து விசாரணையை தொடர்ந்து இருக்க வேண்டும் .ஆனால் நீதிமன்றங்களும் இவ்விஷயத்தில் கனத்த மவுனம் காப்பது தமிழக மக்களை அதிரச் செய்கிறது.

சரஸ்வதி பூஜை விஜயதசமி கொண்டாட்டங்கள் எல்லாம் இந்து சனாதனத்தில் வழிவந்த ஆன்மீக அடையாளங்கள் தான். இந்து தர்மத்தின் வழியில் முன்னெடுக்கும் பண்டிகை கொண்டாட்டங்கள் தான். நிச்சயமாக இவை இந்து பண்டிகைகள் தான் மறுப்பதற்கு இல்லை. ஆனால் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த மக்கள் இந்த தர்மத்தின் வழியில் வாழும் மக்கள் அவர்கள் பூஜைகள் பண்டிகைகள் கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னெடுப்பதற்கு யாருடைய அனுமதியும் அவர்களுக்கு தேவையில்லை. அவர்களின் மதம் சார்ந்த வழிகாட்டுதல்களும் மதம் சார்ந்த அற நூல்கள் ஆன்மீக பெரியோர்களின் அறிவுரைகளும் அவர்களுக்கு போதுமானது. பொது இடங்களில் இதன் காரணமாக ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமானால் அவற்றிற்கு தேவையான வழிகாட்டும் நெறிமுறைகள் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதை கண்காணிக்க வேண்டியது நீதிமன்றங்களின் பொறுப்பு. ஆனால் இதையெல்லாம் செய்ய வேண்டிய அரசு அதன் கடமையிலிருந்து முழுமையாக தவறி மொத்தமாக பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது என்பது அப்பட்டமான இந்து துவேஷம் மக்கள் விரோத அரசு என்பதன் வெளிப்பாடு மட்டுமே. இதை கேள்வி கேட்க வேண்டிய நீதிமன்றங்களும் அமைதியாக கடந்து போவது மக்களை நீதிமன்றங்களின் மீது இருக்கும் நம்பிக்கையையும் தகர்த்து விடும் என்பதை நீதிமன்றம் உணரட்டும்.

உரிய ஆவணங்கள் இல்லை என்று 200க்கும் மேற்பட்ட ஆலயங்களை இடித்து தரைமட்டமாகிய போது நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்து இடிக்கப்பட்ட ஆலயங்கள் அவை இருக்கும் மனைகள் அவற்றின் பட்டாக்கள் அரசாங்கத்திற்கு சொந்தம் என்பதற்கோ அல்லது வேறு ஒரு தனி நபர் அமைப்பு சார்ந்த அவருக்கு சொந்தம் என்பதற்கு எந்த ஆவணம் இருக்கிறது? எந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆலயங்களை நீங்கள் தகர்க்கிறீர்கள் ? என்று ஒரு கேள்வி எழுப்பியிருந்தால் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும் . கேட்பார் இல்லை என்று அராஜகத்தில் ஈடுபடும் அரசுக்கு தம்மை தட்டிக் கேட்பதற்கு ஒரு நீதிமன்றம் இருக்கிறது என்ற அச்சமும் எழுந்திருக்கும். அடுத்தடுத்து அராஜகங்கள் அராஜகங்கள் அரங்கேறி இருக்காது. ஆனால் நீதிமன்றங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் அமைதியாக கடந்து போனதன் விளைவு இன்று தமிழகத்தில் இந்து விரோதமும் பண்டிகை கொண்டாட்டங்கள் உற்சவங்கள் மீதான வன்மமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

தர்மத்தின் மீது நம்பிக்கையும் மரியாதையும் இல்லாதவனுக்கு சட்டத்தின் மீது எப்படி நம்பிக்கை மரியாதை வந்துவிடும்? என்று தமிழக மக்கள் யோசித்து இருந்தால் அதிகார கொள்ளைக்காரர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்திருக்க மாட்டார்கள் . தான் வணங்கும் இறைவனை மதிக்காதவன் தன்னை எப்படி சக குடிமகனாக மதிப்பான் ? என்று யோசித்து தன்மானத்தின் வழியில் வாக்களித்திருந்தால் இந்து விரோதிகளுக்கு ஆன்மிக தமிழக பூமியில் தமிழ் மண்ணில் ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்காது. தன் ஆலயங்களையே இடித்து தரைமட்டமாக்கும் வெறிகொண்டு அலைபவன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மட்டும் எப்படி நிம்மதியாக வாழ விட்டு விடுவான் ? என்று யோசித்து இனி வரும் காலங்களில் வாக்களித்தால் மடங இன்று தனது பண்டிகை கொண்டாட்டங்களுக்கு கூட நீதிமன்றத்தில் போய் அனுமதி வாங்கும் துரதிருஷ்டமான நிலை தமிழகத்தில் எதிர் காலத்தில் இருக்காது. ஆனால் இவை அனைத்தும் கடந்தும் கூட நாங்களும் இந்துக்கள் தான் எங்களுக்கும் ஆன்மீக நம்பிக்கைகள் இருக்கிறது என்று நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு பேசும் அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி அவர்களின் பின் செல்லும் அறியாமையும் சுயநலமும் பேராசையும் தேர்தலில் எதிரொலிக்கும் வரையில் தமிழகத்திற்கு விடியல் விடியல் என்பது வெகு தூரம் தான்.

விடியல் தருகிறோம் என்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு தன்னை நம்பி வாக்களித்த அப்பாவி இந்து மக்களை உயிரோடு வதைக்கிறது. கட்சி அரசியல் வேறு. தங்களின் ஆன்மீக நம்பிக்கைகள் வேறு என்று அப்பாவியாக அறியாமையில் இந்து விரோத திமுகவை நம்பி வாக்களித்ததன் பலனை இன்று அழுதபடியே அறுவடை செய்கிறது. விடியல் வரும் என்று இலவசத் திற்கும் சில நூறு ரூபாய் தாளுக்கும் வாக்களித்த தமிழக மக்கள் இன்று விட்டில் பூச்சிகளாக பரிதவிக்கிறார்கள். இந்த ஆட்சியே சிறுபான்மை மக்களின் பிச்சையில் வந்தது என்று சொல்பவர்கள். ஆட்சி போனாலும் பரவாயில்லை சனாதனத்தை அழிப்பது தான் இலக்கு என்று பேசுபவர்கள் ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆயுதபூஜை கொண்டாடினால் கூடுதல் வரி அபராதம் என்றோ சிறைத்தண்டனை அல்லது மரணதண்டனை என்று அறிவிக்காமல் பூஜைக்கு தடை என்று சொன்னவரை இலாபம் என்று வாக்களித்த மக்கள் மனதை தேற்றி கொள்ளலாம். ஆனால் மதம் மாறிய பிறகு கூட இன்னமும் குலதெய்வ வழிபாட்டு முறையில் இருக்கும் மக்களை மண்ணை அதன் சனாதன தர்மத்தின் பண்டிகை கொண்டாட்டங்கள் வழிபாட்டு முறைகள் எல்லாம் ஆட்சி அதிகாரம் கொண்டு தடை செய்து விட முடியும் என்று நம்பும் ஆட்சியாளர்கள் அவர்களின் ஆழ்ந்த அறிவு புலமை பார்த்து ஆன்மீகமும் ஆன்மீக வாதிகளும் சிரித்துக் கொண்டே கடந்து போகிறார்கள். காரணம் இந்த இந்து விரோதமும் இந்துக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதமும் தற்காலிக வெற்றியை தரலாம். ஆனால் இது போன்ற அராஜகங்கள் எதுவும் அதை செய்த அராஜகவாதிகள் யாரும் இந்த மண்ணில் நிலைத்தது இல்லை. அவர்கள் எண்ணம் பலித்ததும் இல்லை. இதை வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் புரியும்.


Share it if you like it