விவசாயத்துறை சார்ந்த பங்குச் சந்தையில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் 2 மற்றும் 3 மடங்கு லாபம் ஈட்ட வாய்ப்பு இருப்பதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை, விளை பொருட்கள் தட்டுப்பாடு, மானியத்தில் முறைகேடு, உரம் தட்டுப்பாடு என பல வகையான பிரச்னைகளை சந்தித்து வந்தனர் விவசாயிகள். ஆகவே, பாரத நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் முதலில் விவசாயத் துறையில்தான் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். அனைத்து விவசாயிகளுக்கும் வங்கிக் கணக்கை துவங்கி, பயனாளிகளின் ஆதாருடன் இணைத்து நேரடி மானியத்தை முழு வீச்சில் செயல்படுத்தி முறைகேடுகளை கலைந்தார். பின்னர், விவசாய உபகரணங்கள், உரங்கள், நடவு விதைகள் என அனைத்துப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்கவும், அவை முறையாக பயனாளிக்குச் சென்றடையவும் வழிவகை செய்தார்.
அதேபோல, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழுமையாக காப்பீடு திட்டத்தினை அமல்படுத்தி பேரிடர் காலங்களில் முறையாக இழப்பீடு வழங்கி விவசாய தற்கொலைகளை அடியோடு ஒழித்து விட்டார். 2020 முதல் 2022 வரையிலான கோவிட் காலங்களில் சிறு சிரமத்திற்கும் ஆளாகாத வண்ணம் முழு வீச்சில் விவசாயப் பணிகள் நடைபெற்றுள்ளன. நேரடி மானியமாக ரூ.6,000 வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டது. நாடு முழுவதும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து தானியங்களும் அமோக விளைச்சல் கண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, நிகழாண்டும் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பங்குச் சந்தையில் அனைத்து விவசாயத் துறை சார்ந்த பங்குகளின் விலை 52 வார உச்சத்தில் உள்ளது. இதன் வெற்றி பயணம் தொடரும் என்றே பல நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. ஆகவே, முதலீட்டாளர்கள் விவசாயத் துறை சார்ந்த பங்குகளில் நீண்டகால அடிப்படையில் முதலிடுகளை மேற்கோள்ளும் பட்சத்தில் 2X – 3X லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.