முதலீட்டாளர்களே வெயிட் பண்ணுங்க!

முதலீட்டாளர்களே வெயிட் பண்ணுங்க!

Share it if you like it

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தற்போது அவசரப்பட வேண்டாம். செப்டம்பர் மாதம் வரை காத்திருங்கள். அப்போதுதான், அதிக லாபத்தை பெற முடியும் என்கிறார்கள் பங்குச்சந்தை பொருளாதார நிபுணர்கள்.

இந்திய பங்குச்சந்தையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நிஃப்டி 16,220 புள்ளிகளில் முடிவடைந்தது. இதன் மூலம் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இந்த ஏற்றம் முதலீட்டாளர்களை ரொம்பவே குஷிப்படுத்தி இருக்கிறது. இதனால், தொடர்ந்து முதலீடு செய்யும் முடிவில் இருக்கிறார்கள். ஆனால், இந்த ஏற்றம் தொடர்ந்து இருக்குமா, இருக்க வாய்ப்பு இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு முதலீடு செய்வதை பற்றி சிந்தியுங்கள் என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இது பற்றி பார்ப்போம்.

இதுபற்றி பங்குச்சந்தை பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். “நமது நாட்டைப் பொறுத்தவரை, பணவீக்கம் மற்றும் வளர்ச்சி நல்ல முறையில் இருந்து வருகிறது. மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் எடுத்து வருகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் அரசு பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. கூடிய விரைவில் விலைகள் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, நமது நாடு 5ஜி சேவையை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதானி குழுமம் பல்வேறு புதிய துறைகளில் தடம் பதித்த ஆரம்பித்திருக்கிறது. இது உள்நாட்டு உற்பத்தி மற்றும் பல புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல, ஏற்றுமதி துறையில் நமது நாடு நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் யு.பி.ஐ. மூலம் மாத பணப் பரிவர்த்தனை நடந்து வருகிறது.

தவிர, லாஜிஸ்டிக்ஸ் துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக இதன் பங்குகள் அடுத்த ஓராண்டில் நல்ல லாபம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நமது பாரதம் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இலவசமாக உணவு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் அனுப்பி மக்களின் துயர் துடைத்து வருகிறது. நமது நிதி நிலைமை கட்டுக்குள் இருக்கும் போதிலும், உலக அளவில் பல இடங்களில் மந்தநிலையே நீடித்தது வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.

இதன் காரணமாக, 2008-ம் ஆண்டைப் போல ஒரு வீழ்ச்சியை உலகம் சந்திக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆகவே, பங்குச்சந்தையில் அன்னிய முதலீடுகள் குறைந்து வருகிறது. அதேபோல, மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த மாதம் முதல் முதலீடுகள் குறைந்த வருகிறது. இது ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பங்குச்சந்தை 20 முதல் 30 சதவிகிதம்வரை வீழ்ச்சியடைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆகவே, எதிர்வரும் செப்டம்பர் வரை நாம் எந்தவொரு பெரிய முதலீடுகளும் செய்யாமல் காத்திருப்பது நல்லது. நினைவு வைத்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு இரக்கமும் முதலீடு செய்ய நமக்கான நல்ல வாய்ப்பு. 2024-25-ஐ மனதில் கொண்டு முதலீடு செய்யும் பட்சத்தில் பல மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.


Share it if you like it