காஞ்சிபுரம் : மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் சிறுபான்மை மக்கள் வழிபாட்டு கூடங்களில் அவர்கள் வழிபடுவதற்கான நிம்மதியான ஒரு அமைதியான சூழ்நிலைகள் இல்லை என்று பெருமளவில் புகார்கள் வருகின்றன. வருகிற நாட்களில் சிறுபான்மை மக்கள் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான எல்லா பாதுகாப்பையும் தமிழகத்தின் புதிய அரசு செய்து கொடுக்கும் என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது ஆடிப்பூரம் போன்ற விசேஷ நாட்களில் கூட பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டு ஹிந்துக்கள் வேதனையில் இருக்கின்றனர். இது போன்று பெருபான்மையாக இருக்க கூடிய ஹிந்துக்கள் வழிபாட்டில் இது போல் எத்தனை தடைகள் தமிழக அரசு விதித்துள்ளது . ஆனால் ஹிந்து மக்க்களுக்காக தமிழக அரசு அறிவித்த ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் இது போல் ஹிந்துக்கள் வழிபாட்டு கூடங்களில் எந்த தடைகளும் இருக்காது என்று கூறாமல் இருப்பது ஏன்? என்று ஹிந்துகள் கேள்வி எழுப்பினர்.