திமுக எம்எல்ஏ கல்லூரியில் மாணவி தற்கொலை : நடவடிக்கை பாயுமா ? நீதி கிடைக்குமா ?

திமுக எம்எல்ஏ கல்லூரியில் மாணவி தற்கொலை : நடவடிக்கை பாயுமா ? நீதி கிடைக்குமா ?

Share it if you like it

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக்கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.

மேலும் இறந்த தாரணியை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் மதியம் 12 மணி அளவில் தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடுநேரத்திற்கு பின் ஆறு மணி அளவில் தாரணி இறந்துவிட்டார் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெரித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவியின் தாய், ‘தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொன்று விட்டனர். எனது மகளை பறிகொடுத்து விட்டேனே’ எனக் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

இதுவே நீட் தேர்வினால் மாணவி இறந்த செய்தி என்றால் திமுகவினர் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி அறிக்கை மேல் அறிக்கை விட்டு பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று பெரிய நாடகத்தையே நடத்தி இருப்பார்கள். ஆனால் தற்போது நடந்த நிகழ்வோ திமுக நிர்வாகியின் கல்லூரியில் நடந்ததால் இந்த சம்பவம் வெளியில் தெரியாமல் மிகவும் லாவகமாக மூடி மறைத்து விடுகின்றனர். காவல் துறை அதிகாரிகளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் இந்த சம்பவத்தில் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே ?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்தை மக்களின் பார்வைக்கு எடுத்துச்சென்று இதன் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து இறந்துபோன மாணவியின் ஆன்மா சாந்தி அடையவும் பெற்ற மகளை பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் பெற்றோர்களுக்கு நீதி கிடைக்கவும் செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மனக்குமுறல்களை பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *