திராவிட குட்டையை மீண்டும் குழப்பி விட்ட  தி.க தலைவரின் நெருங்கிய நண்பர் சுப.வீ..!  

திராவிட குட்டையை மீண்டும் குழப்பி விட்ட  தி.க தலைவரின் நெருங்கிய நண்பர் சுப.வீ..!  

Share it if you like it

ஜாதி பேதமற்ற ஹிந்துக்களே திராவிடர்கள். திராவிடர்களும் தமிழர்களே. ஆனால், ஜாதி பேதமற்ற, பாலின பேதமற்ற, கொள்கையை கொண்டவர்கள் தான் திராவிடர்கள். என சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை நெட்சன்களை  நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

திராவிட இயக்கம் தோன்றிய காலம் முதல் இன்று வரை திராவிடம் எனும் வார்த்தைக்கு பல்வேறு விதமான விளக்கங்களை பலரும் கூறி வரும் நிலையில் இது வரையில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு திராவிட இயக்கங்களால் வரமுடியவில்லை.

இந்நிலையில் தி.க தலைவர் வீரமணியின் மிக நெருங்கிய நண்பர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் மூலம் திராவிட இயக்கத்தவர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி திரியும் நபர்கள் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், திராவிடம் என்றால்  என்னவென்பதை பற்றி எந்த ஒரு புரிதலும் இல்லாமல்.  மக்களின் மீது ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்தி திராவிடம் எனும் வார்த்தையை மேலும் கேலிக் கூத்தாக்கியுள்ளார் சுப.வீ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 


Share it if you like it