சுதா கொங்கரா இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு “துரோகி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். 2002-ம் ஆண்டு இந்திய ஆங்கில படமான “மை பிரெண்ட்” திரைப்படத்திற்கு திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் 2010-ம் ஆண்டு தமிழில் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த துரோகி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பின் 2016-ம் ஆண்டு தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” திரைப்படத்தினை இயக்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017-ம் ஆண்டு “குரு” என்ற தலைப்பில் இப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார். இறுதிச்சுற்று படத்தின் வெற்றியின் மூலம் தமிழில் முன்னணி இயக்குனராக கருதப்படுகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர், நான் வரலாறு படித்துள்ளேன். எங்க டீச்சர் ஒருவர் எனக்கு சொன்னாங்க. அதுல வீர சாவர்க்கர் அப்போது பெரிய தலைவர், அனைவராலும் மதிக்கப்படுபவர், அவர் கல்யாணம் பண்ணிட்டு அவரோட மனைவியை படிக்க சொல்லி கட்டாய படுத்தி இருக்காரு. ஆனா அவங்க மனைவிக்கு குடும்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதைத்தான் விரும்பினார். ஏனெனில் அப்போது பெண்கள் படிக்க முடியாத சூழல் தான் இருந்தது. அந்த சூழ்நிலையிலும் சாவர்க்கரின் மனைவி பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் போது அவரை தெருவில் உள்ளவர்கள் அசிங்கம் படுத்துவார்கள் கிண்டல் செய்வாங்க, அதனால அந்த அம்மா அழுவாங்க, இத சாவர்க்கர் கிட்ட சொல்லி நான் இனிமே ஸ்கூலுக்கு போகமாட்டேனு சொல்லி அழுதாங்க, உடனே சாவர்க்கர் நாளைக்கு நான் உன்ன கூட்டிட்டு போறன், யாரு என்ன சொல்ராங்கனு நான் பாக்குறேன், வா என்று சொல்லி அவரு கைய புடிச்சி கூட்டிட்டு போவாரு, அது சரியா ? தவறா ? சோ என்னோட கேள்வி அங்க இருந்து ஸ்டார்ட் ஆச்சி. இவ்வாறு இயக்குனர் சுதா கொங்கரா பேசியுள்ளார்.
வீர சாவர்க்கர் மிக பெரிய சுதந்திர போராட்ட வீரர். இந்திய விடுதலைக்காக தன்னுடைய வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை சிறையில் கழித்தவர். இவ்வாறு இருக்க திமுக திக கட்சிகள் மட்டும் வீர சாவர்க்கரை தவறாக சித்தரித்து பொய்யான கருத்துக்களை பரப்பி வருகிறது. இந்த நிலையில் பிரபல இயங்குனரான சுதா கொங்கரா வீர சாவர்க்கரை பற்றி பாராட்டி பேசியிருப்பதால் இவரும் ஒரு சங்கியா ? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.