ஹிந்துக்களின் போர்வையில் இருந்துக்கொண்டு முழுக்க முழுக்க திராவிட சித்தாந்தத்தை பரப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மிக பேச்சாளர் என்று சொல்ல கூடிய சுகிசிவம். இவர் சமீப காலமாக ஹிந்துக்களுக்கு எதிராகவும் ஹிந்து மதத்திற்கு எதிராகவும் மிகவும் சர்ச்சையான தரக்குறைவான கருத்துக்களை கூறி மக்களிடம் வாங்கி கட்டி கொள்கிறார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் தற்போது குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு முதலில் சயன கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 40 நாட்கள் மட்டுமே அத்தி வரதரை காண முடியும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை காண காஞ்சிபுரத்திற்கு குவிந்தனர்.
இதனை மையமாக வைத்து ஆன்மீக பேச்சாளர் சுகிசிவம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விழாவில் பேசும்போது, அவரது பாணியில் அத்தி வரதர் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதில், ” அத்திவரதரை தரிசிக்க பலர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அப்படி ஏன் கடவுளை காண வேண்டும்? உங்களை கஷ்டப்படுத்த நினைப்பாரா கடவுள்? இவ்வளவு இடிபாடுகளுடன் சென்று பல துன்பங்களை அனுபவித்து கடவுளை காணாவிட்டால்தான் என்ன” என்று பேசியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளப்பியது. சுகிசிவம் தனது கருத்துக்களை திருப்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் சுகிசிவம், பழனியில் உள்ள கடவுள் முருகனே அல்ல. பழனி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றே கிடையாது. பழனியில் இருப்பது ஒரு போகர் சிலை என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். சுகிசிவத்தின் இந்த கருத்து ஹிந்துக்களை கோபமுற செய்துள்ளது.
மேலும் ஹிந்துக்களின் கடவுளான முருகர், சிவன் ஆகிய கடவுள்கள் கடவுளே இல்லை என்றும் பேசிய காணொளி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆன்மிக பேச்சாளர் என்ற போர்வையில் இருந்துக்கொண்டு தொடர்ந்து ஹிந்து மத கடவுள்களை குறித்து தரக்குறைவாக பேசி வருகின்ற சுகிசிவத்தை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஹிந்து தர்மத்திற்கு எதிராக தொடர்ந்து தரக்குறைவான கருத்துக்களை பேசி வருவதால் எந்த நிகழ்ச்சிக்கும் சுகிசிவத்தை அழைக்காமல் ஹிந்துக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டனர்.