கடந்த 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றத்தில் இருந்து, அனைத்து தேசவிரோத ஊடகங்களின் ஓநாய்களின் பார்வையும் அவரின் பக்கம் திரும்பியது. அந்த மாநிலத்தில் ஏதாவது ஒரு குற்றம் குறை கிடைக்காதா..? அதை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி விட முடியாதா..? என துடித்துக் கொண்டிருந்தனர் ஆனால் இவர்கள் எதிர் பார்த்தது போல் எதுவும் இன்று வரை நடக்கவில்லை.
ராமர் கோவில் விவகாரத்தை அமைதியான முறையில் கையாண்டது முதல், கொரோனாவை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி 100 % தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது உத்திரபிரதேசம். இவற்றை பார்த்து பொறுக்க முடியாத பிரிவினைவாத ஊடகங்கள், பொய் செய்திகளையும், சாதாரண விஷயங்களையும் எடுத்து பூதாகரப்படுத்த துவங்கின என்பது கசப்பான உண்மை
அடுத்த ஆண்டு உ.பி சட்டமன்ற தேர்தல் வருகிறது என்பதால் இன்னும் உக்கிரமாகி பேமெண்ட் ஊடகங்கள் பொய் செய்திகளை போட துவங்கியுள்ளன.அதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்னர் ஒரு இஸ்லாமிய முதியவரை சில மர்ம நபர்கள் தாக்கி அவரது தாடியை மழிக்கும் காட்சிகள் இடம் பெற்ற காணொளி ஒன்றினை வெளியிட்டு, “ஜெய் ஸ்ரீராம்” என சொல்லக் கூறி முஸ்லீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல் என்பது போன்ற தலைப்புகளை கொடுத்து செய்திகளை பரவ விட்டனர். ஆனால் இந்த காணொளியில் யாருடைய குரல்களும் கேட்காத தவண்ணம் மியூட் செய்யப்பட்டிருந்தது.
உடனே இந்த விவகாரத்தை பற்றி விசாரிக்காமல் சமூக விரோதிகளும், பிரிவினைவாத ஊடகங்களும், ஹிந்து தீவிரவாதம், ஹிந்துத்துவா, என்றெல்லாம் ஹிந்துக்களுக்கு எதிராக செய்திகளை பரப்பி விட்டனர். இவர்களுக்கு முட்டு கொடுக்க இங்கிருந்து சன் செய்தி, வினவு, IBC, போன்ற ஊடகங்களும் கிளம்பி ஹிந்துக்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டது.
யோகியின் உத்தரவின் பேரில் இந்த வீடியோவை பற்றி உ.பி போலீசார் விசாரிக்க துவங்கினர். இனி தான் ஒவ்வொரு விஷயமாக வெளிவரத் துவங்கியது. முதல் அதிர்ச்சி தகவலாக அந்த முதியவரை தாக்கிய மூன்று பேர் இஸ்லாமியர்கள் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த அதிர்ச்சி தகவலாக இச்சம்பவம் அவரை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி அடித்தது இல்லை, குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்க துவா செய்து தாயத்து தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு, ஏமாற்றியதால் அவரைத் தாக்கி உள்ளனர்.
இந்த வீடியோவை வெளியிட்டது முஹம்மது சுபைர் என்பவர், அந்த வீடியோவில் பயன்படுத்தப்படும் இஸ்லாமிய பெயர்கள் தெரிந்து விட கூடாது என்பதால் தான் அந்த காணொளியை மியூட் செய்து வெளியிட்டுள்ளார். மேலும் இது போன்ற வெறுப்பை பரப்பும் வீடியோவை நீக்க கோரியும் டுவிட்டர் நீக்காததால் அந்நிறுவனத்தின் மீதும் உ.பி போலீசார் வழக்கு பதிந்தனர்.
இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை பார்த்து பொய் செய்தி போட்ட அனைத்து ஊடகங்களுக்கும் வயிறு கலங்கியது. இங்கிருந்த கொந்தளித்த, சன் செய்தி, வினவு, IBC போன்றவை என்ன செய்வது என்று தெரியாமல் “கடைசியில் படுத்தே விட்டான் ஐயா” என்பது போல் மேற்கண்ட உண்மைகளை வெளியிட்டு மழுப்பலாக மன்னிப்பு கேட்டது… சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க இது போன்ற சம்பவங்களே காரணம். மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் வாசுதேவ்.R