பூ உலகின் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநிலம் குறித்து உண்மைக்கு புறம்பாக வெளியிட்ட செய்திக்கு பிரபல அரசியல் விமர்சகர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.
தி.மு.க ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் செய்யும் அட்டூழியங்கள், அடாவடிகள் என தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என பலர் மதுவிற்கு அடிமையாகி தமிழகம் மோசமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் தமிழகம் பின்னோக்கி செல்வதாக பலர் கடுமையான குற்றச்சாட்டினை சுமத்தி வருகின்றனர். இது குறித்து, எல்லாம் பேசாமல் வழக்கம் போல பா.ஜ.க. ஆளும் மாநிலத்தை பற்றி குறை கூறியுள்ளார் இந்த சுற்றுசூழல் போராளி. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு. பெங்களூரில் உள்ள பல தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற அல்லது மேலும் விரிவாக்கம் செய்யாமல் இருக்கப்போவதாக முடிவெடுத்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மதவெறி அதிகரித்துவருவதைதான் ஒற்றை காரணமாக சொல்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது உதாரணம்.
பா.ஜ.க ஆளும் மாநிலம் குறித்து தவறான தகவல் பதிவு செய்த சுந்தரராஜனுக்கு பிரபல அரசியல் விமர்சகர் கிருஷ்ணகுமார் முருகன் தக்க பதிலடியை கொடுத்துள்ளார். 2021- ஆம் ஆண்டு மாநில வாரியாக அந்நிய நேரடி முதலீடுகளில் முதல் இடத்தில் கர்நாடகா உள்ளது; 1,38,750 கோடி ரூபாய். தமிழகத்தை விட 6 மடங்கு அதிகம். இப்படி பொய்யான செய்திகளைப் பரப்புவதால் பத்து பைசா பிரயோஜனம் இல்ல. என்று குறிப்பிட்டுள்ளார். தி.மு.க ஆட்சியில் நடக்கும் கனிமவளம் மற்றும் மணல் கொள்ளை குறித்து பேசாமல் பா.ஜ.க ஆளும் மாநிலம் குறித்து ஏன்? இவர் பேச வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.