சென்னை மெரினாவில் ஆமை முட்டை போட வருவதாக சுற்றுசூழல் ஆர்வலர் சுந்தர ராஜன் தெரிவித்து இருக்கும் கருத்து பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று திறனாளிகள் கடற்கரையை அருகில் சென்று பார்க்கும் வண்ணம் கடந்த நவ., 27 – ஆம் தேதி மெரினாவில் மரப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், ’மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட அலையில் அந்த மரப்பாலம் பெரிதும் சேதமடைந்தது. இப்பாலம், அமைத்து 10 நாட்கள் கூட ஆகவில்லை என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில், பூ உலகின் அமைப்பை சேர்ந்தவரும், சுற்றுசூழல் ஆர்வலராக தம்மை காட்டிக்கொள்ளும் சுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ;
ஆமைகள் முட்டையிட வந்து போகும் பகுதியில் கடினமான கட்டுமானங்களைக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை CRZ விதியின் கீழ் அமைக்க முடியாது. எளிதில் அகற்றக்கூடிய வகையில் தற்காலிகமான வகையில்தான் பாதை அமைக்க முடியும்.
கடல் அலைகளின் சீற்றத்தால் இந்த மரப்பாலம் சேதமடைந்துள்ளது. இந்தப்பாதையை பயன்படுத்தி முதல்முறையாக கடலில் கால் நனைத்த மாற்றுத்திறனாளிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு வேறெதுவும் ஈடாகாது. புயல் காலங்களில் அல்லது சீற்றத்தால் சேதமடைந்தால், அந்த பகுதியை அகற்றிவிட்டு மீண்டும் சீரமைத்தால் போதும்.
மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இப்படிப்பட்ட, இடத்தில் வந்து ஆமை முட்டை வைக்குமா? பண்டிக்கை மற்றும் விழா காலங்களில் மக்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். அப்படியிருக்க, ஆமை எப்படி அங்கே? வரும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
இரண்டாவது சீமானாக மாறி வரும் தி.மு.க. ஆதரவாளர் சுந்தரராஜனை நாமும் வாழ்த்துவோமே என நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.