வல்லரசு நாட்டில் விநாயகர்!

வல்லரசு நாட்டில் விநாயகர்!

Share it if you like it

அமெரிக்காவில் புகழ் பெற்ற தெருவின் பெயரை மாற்றி ஹிந்துக்களின் விருப்பத்திற்குரிய தெய்வமான விநாயகர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெ., நியூயார்க் குயின்ஸ் கவுண்டியில் உள்ள ஃப்ளஷிங்கில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்கு, வெளியே புகழ் பெற்ற போவ்ன் தெரு உள்ளது. மதசுதந்திர இயக்கத்தின் முன்னணி அமெரிக்க முன்னோடியான ஜான் போவின் பெயரில் இத்தெரு அழைக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் கணிசமாக ஹிந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இவர்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமாக விநாயகர் கோவில் இருந்து வருகிறது. இக்கோவில், 1977 -ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி திறக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. வட அமெரிக்காவின் முதல் இந்து கோவிலாக இது பார்க்கப்படுகிறது. இதுதவிர, ஒரு ஆடிட்டோரியம், மாநாட்டு அறைகள், திருமண மண்டபங்கள் மற்றும் சைவ உணவகம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சமூக மைய வளாகமாக இக்கோவில் திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பரில் நியூயார்க் நகர கவுன்சிலர் பீட்டர் கூ தலைமையிலான குழு, போவ்ன் தெருவை “கணேஷ் கோயில் தெரு” என்று அழைக்க ஒப்புதல் வழங்கி இருந்தது. ஹிந்துக்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமாக உள்ள விநாயகருக்கு, பெருமை சேர்க்கும் விதமாக இதுநாள் வரை அழைக்கப்பட்டு வந்த போவ்ன் தெருவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத் தூதர் திலீப் சௌஹான், வர்த்தகம், முதலீடு மற்றும் புத்தாக்கத் துறையின் துணை ஆணையர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுதவிர, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ். அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் அமெரிக்க மக்கள் பலர் கலந்து கொண்டனர். ஹிந்து கடவுளின் பெயர் தாங்கிய தெரு அமெரிக்காவில் அமைந்து இருப்பது, இந்திய மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காணொளியை நெட்டிசன்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it