சென்னை தீவுத்திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர், மத்திய, மாநில அமைச்சர்கள், தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள், மக்கள் என லட்சக்கணக்கானோர் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவருடைய இறப்புக்கு அஞ்சலி செலுத்த வராத நடிகர்களை திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் அவர்கள் விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக நடிகர் சூர்யா விஜயகாந்த் இறப்புக்கு வராமல் வெளிநாட்டில் இருப்பதாகவும் அதனால் கேப்டன் அவர்களுக்கு தன்னால் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என்றும் காரை நிறுத்திவிட்டு பேசக்கூட நேரம் இல்லாமல் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்தபடியே விஜயகாந்த் குறித்து காணொளி ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். நேரில் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை சரி தனது காரை இரண்டு நிமிடம் நிறுத்தியாவது பேசியிருக்கலாமே என்று சூர்யாவை நெட்டிசன்களும் மற்றும் புளுசட்டை மாறன் சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக புளுசட்டை மாறன் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-
விஜய்க்கு செந்தூரபாண்டி போல, உங்களுக்கு பெரியண்ணா படத்தில் நடித்து தந்தவர் கேப்டன்.
நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால் இங்கே வர இயலவில்லை என்கிறீர்கள். அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.
ஆனால்.. மனிதநேயம் மிக்க மகத்தான கலைஞருக்கு… இப்படி காரில் சென்றவாறே அவசர அவசரமாக அஞ்சலி செலுத்துவது ஏன்?
நீங்கள் தங்கும் அறையில் ஓரிரு நிமிடம் பேசி வீடியோவை வெளியிட்டால் என்ன? அல்லது காரில் ஏறும் முன்போ, பின்போ கூட பேசலாமே?
Ethics எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதா?
Enjoy the new year..
வெளிநாட்டில் பிஸியாக இருக்கும் சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு உள்ளிட்டோருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
புத்தாண்டு நிகழ்ச்சிகள் முடிந்தபிறகு பொறுமையாக வரவும்.
காரில் சென்றபடியே கேப்டனின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த சூர்யாவிற்கு சிறப்பு புத்தாண்டு வாழ்த்துகள்.