ஹிந்து பெண்கள் ஆ.ராசாவை செருப்பால் அடிக்க வேண்டும் – வேலூர் இப்ராஹிம் ஆவேசம்!

ஹிந்து பெண்கள் ஆ.ராசாவை செருப்பால் அடிக்க வேண்டும் – வேலூர் இப்ராஹிம் ஆவேசம்!

Share it if you like it

தி.மு.க. எம்.பி. ஆ. ராசாவை ஹிந்து பெண்கள் செருப்பால் அடித்தாலும் தவறில்லை என வேலூர் இப்ராஹிம் ஆவேசத்துடன் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசி இருந்தார். ஆ.ராசாவின், இந்த கருத்து ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பத்திரிகையாளர்களை சந்திப்பில் இவ்வாறு பேசி இருக்கிறார்;

தமிழகத்தில், தி.மு.க. அரசு அமைந்த பின்பு தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக, ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக மிக கடுமையான விமர்சனங்களை தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்து கொண்டு இருக்கின்றனர். இதனை, பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. ஹிந்துக்களை, இழிவுப்படுத்துவதை இங்குள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

இன்று, ஹிந்துக்களை இழிவுப்படுத்துபவர்கள் நாளை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களின் மதநம்பிக்கையையும் இழிவுப்படுத்துவார்கள். கடவுளை மறுப்பவன் தான் நல்லவன் என்று சொல்லக்கூடிய காட்டு மிராண்டி ஈ.வெ.ரா. கூட்டம் தான் இந்த தி.மு.க. கூட்டம். இப்படிப்பட்ட, நபரை ஹிந்து பெண்மணிகள், எனது அருமை தொப்புள் கொடி உறவுகள் செருப்பால் அடித்தால் கூட சரியாக இருக்கும் என ஆவேசத்துடன் பேசி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it