ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி கலவரத்தை தூண்ட முயன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தி.மு.க மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமாக இருப்பவர் டி.ஆர். பாலு. இவரின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏ-வுமாக இருப்பவர் டி.ஆர்.பி ராஜா. இவர், பாரதப் பிரமதர் மோடி, மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.விற்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்புவதையே நோக்கமாக கொண்டவர். அந்த வகையில், கடந்த 2013 – ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட ஊர்தியை, பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற அணிவகுப்போடு ஒப்பிட்டு பொய் செய்தியை பரப்பி இருந்தார். இது பொய் செய்தி என பா.ஜ.க ஐடி விங் பதிலடியை கொடுத்த பிறகு அதுகுறித்து பேசாமல் கள்ள மெளனம் காத்தவர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வரும் முன்பே, 134 வார்டு பா.ஜ.க வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 ஓட்டு வாங்கி படுதோல்வியடைந்தார் என பொய் செய்தியை பரப்பி இருந்தார். ஆனால், பா.ஜ.க வேட்பாளர் 5,000 வாக்குகளுக்கு மேல் பெற்று காங்கிரஸ் வேட்பாளரை மண்ணணை கவ்வ செய்து இருந்தார். இதையடுத்து, தனது ட்விட்டர் பதிவை கமுக்கமாக நீக்கி இருந்தார்.
இதையடுத்து, “கருத்துச் சொல்லுங்கள். மாற்றுக் கருத்துச் சொல்லுங்கள். இல்ல நாங்க சொல்றது பொய் என்று கூட வாதாடுங்கள். நாகரீகமாக பதில் வரும். ஆனா என் தலைவன விமர்சிக்க உங்க எவனுக்கும் தகுதியில்ல. மீறி பேசுனா உங்கப்பனாவே இருந்தாலும் அடிப்போம்… sorry… மிதிப்போம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
ஒரு எம்.எல்.ஏ. இவ்வாறு பேசுவது நாகரீகமா? கட்சியில் மிகப் பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படியொரு பதிவை போடலாமா? என்று மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, தனது பதிவை இரவோடு இரவாக நீக்கி இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், ஹிந்துக்களின் புனித கடவுளான விஷ்ணு பகவானை இழிவுப்படுத்தும் நோக்கில் காணொளி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். இது, பெரும் சர்ச்சையாக மாறியதை தொடர்ந்து உடனே அதனை நீக்கியுள்ளார். ஹிந்துக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்த தி.மு.க. எம்.எல்.ஏ.வை காவல்துறை கைது செய்யுமா? அல்லது தி.மு.க.வின் தவறுகளை சுட்டிக்காட்டும் நபர்களை மட்டுமே காவல்துறை கைது செய்யுமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.