பா.ஜ.க.வின் மீது பொய் குற்றச்சாட்டு: ஆபாச பேச்சாளருக்கு குவியும் கண்டனம்!

பா.ஜ.க.வின் மீது பொய் குற்றச்சாட்டு: ஆபாச பேச்சாளருக்கு குவியும் கண்டனம்!

Share it if you like it

பா.ஜ.க.வின் மீது வீண் பழியை சுமத்திய பிரபல ஆபாச பேச்சாளர் தடா ரஹீமிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருப்பவர் தடா ரஹீம். இவர், பாரதப் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.கவிற்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்ப கூடியவர். இதுதவிர, பா.ஜ.க.விற்கு ஆதரவு தெரிவிக்கும் நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்க தக்கவகையிலும் விமர்சனம் செய்வதையே தனது கொள்கையாக கொண்டவர். அந்தவகையில், மத்திய அரசு பிரபல ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Y பிரிவு பாதுகாப்பினை வழங்கி இருந்தது. விபச்சாரிக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்குவதா? என மிக கடுமையான வார்த்தையில் தடா ஜெ ரஹீம் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு, பல தரப்பிலுமிருந்து கடும் கண்டனங்கள் குவிந்ததையொட்டி தனது டுவிட்டர் பதிவினை உடனே நீக்கியிருந்தார்.

ஆபாச பேச்சாளர் தடா ரஹீமினின் பொறுப்பற்ற பதிவிற்கு பிரபல நடிகை கஸ்தூரி சங்கர், ஒரு பெண் விபச்சாரியா இல்லையா என்று ஒரு ஆண் சந்தேகமற அறிவானென்றால் அது ஒன்று அவன் கஸ்டமராக அல்லது ப்ரோக்கராக இருந்தால் மட்டுமே. யாராக இருந்தாலும் அவர்களை அவதூறாக புறம் பேசுவது பெண்களை கொச்சைப்படுத்துவது இவை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டார் பதிலடி கொடுத்து இருந்தார்.

இந்நிலையில், ஒரு தனியார் டி.வி. சேனல் நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, இஸ்லாமிய மதப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முகமது நபி பற்றிய ஒரு கருத்தை மேற்கொள் காட்டி பேசியிருந்தார். இதற்கு, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும், பல இஸ்லாமிய நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து உடனே இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, நுபுர் ஷர்மாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், பொது சொத்துக்கள் மீதும் காவல்துறையினர் மீதும் அடிப்படைவாதிகள் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். இதற்கு, உ.பி அரசு போராட்டம் நடத்திய கலவரக்கார்கள் மீது கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், தடா ஜெ ரஹீம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு தற்பொழுது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில் நிகழ்ந்த பழைய சம்பவம் ஒன்றின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது மட்டுமில்லாமல் இது நடந்தது பா.ஜ.க ஆளும் உத்தரபிரதேசம் என யோகி அரசு மீது அபாண்டமான முறையில் பழியை சுமத்தியுள்ளார்.

Image

Share it if you like it