பாரதப் பிரதமர் மோடி குறித்தும், தனக்கு பிடிக்காத பா.ஜ.க பெண் நிர்வாகிகள் குறித்தும் மிக தவறாகவும் கீழ்த்தரமாகவும் இன்று வரை விமர்சனம் அரசியல்வாதிகளில் பிரபல ஆபாச பேச்சாள தடா ஜெ ரஹிம் என்பவரும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார் தடா ஜெ ரஹிம்..
ஆடு, மாடு, மீன் உட்பட அசைவ உணவு உண்பவர்கள் இல்லை என்றால். மீன் சாப்பிடவில்லை என்றால் கடலில் கப்பல் போகாத அளவிற்கு மீன்கள் தொந்தரவு இருக்கும் ஆடு மாடு சாப்பிடவில்லை என்றால் சாலை முழுவதும் வாகனங்கள் மட்டுமின்றி மனிதர்களே போக முடியாது இதை நவீன ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிள் உணர வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தாலிபான்களின் அட்டூழியங்கள், சேட்டைகள், குறித்து கருத்து தெரிவிக்காமல் வழக்கம் போல ஆப்கானை ஆளும் பயங்கரவாதிகளுக்கு இவ்வாறு முட்டு கொடுத்து பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
துப்பரவு உட்பட மாநகராட்சி யில் பணியாற்றி வந்த பெண் ஊழியர்கள் இனி வேலைக்கு வர வேண்டாம் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த உடன் தாலிபான் அட்டூழியம் பாருங்க என ஊடகங்கள் உட்பட சங்கிகள் கதறல்.. இந்த கஷ்டமான வேலையை பெண்கள் செய்ய தடை போடுவது தவறா ?
சீமான் போன்று தொடர்ந்து ஏதேனும் உளறி வரும் இவரை எல்லாம் ஏன்? இன்னும் என்ஜஏ கைது செய்யாமல் மெளனம் காக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.